செருப்புக்கு மதிப்பு கூட்டும் மனிதர்கள் !

செருப்பு !
காசு கொடுத்து வாங்கிய
காலணி ஆதிக்கமே ! - என்
காலடியில் இருப்பது
குறை என்று எண்ணுகிறாயா ??

உன்
விலைதான் கூடியது
விலைவாசியால் ! - எங்களால்தான் உன்
மதிப்பு கூடுகிறது !
வியப்பாக இருக்கிறதா ?
வாய்பிழந்து நிற்காதே ! கேள்

நீ
பாது காக்க பிறந்தவன் !
பாராட்டுகிறோம் .
உந்தன் மதிப்பு பலவழிகளில் ...!
தலைக்கனம் வேண்டாம் ! கேள்

நீதியின்றி
ஈராக் மக்களை
கொன்று குவித்த புஷ்க்கு
உன்னையல்லவா எறிந்தோம் !
உன்னை
முத்தமிட நாணி தலைகுனிந்தான் !
உன்முன்னில் !
மதிப்பில் நீ உயர
அவன் தாழ்ந்தான் உலக அரங்கில் !

கேரளா மக்கள்
மானம் கேட்டவர்க்கு
செருப்பு மாலைகளால் அபிசேகம் !

சட்டசபைகளும்
செருப்பு விருந்தோம்பலை நடத்த அது
சிறப்பில்லை !
இனம் இனத்தோடு நடத்தும் சண்டை !

சீர்திருத்தவாதி உன்னை
போலி சாமியார்களுக்கும் கொடுக்கவில்லை !
அவர்கள் உன்னை எங்கோ வைத்துவிட
ஆறறிவு மூலதனம்
அடிமைப்படும்
அறியாமையில் !!

உனக்காக ஒரு குறள்
எச்செருப்பு யார்செருப்பு என்பதல்ல
அச்செருப்பு
யாரை எறிகிறோம் என்பதில் !

உன் விருப்பில் நிறுத்தம் !

நட்பில் nashe

எழுதியவர் : nashe (4-Sep-13, 7:07 pm)
பார்வை : 85

மேலே