என் முதல் ஆசான் ! (ஆசிரியர் தின சமர்பணம்)

என் மொழியை நடை அழகில்
போதித்த என் முதல் ஆசான்

செம்மொழியாய் என் தமிழை
பேசி காட்டிய என் முதல் ஆசான்

அகரம் முதல் சிகரம் வரை
அறிய செய்த என் முதல் ஆசான்

ஆத்து சூடியை அறிவாய் எனக்கு
பார்த்து சுட்டிய என் முதல் ஆசான்

திருக்குறளின் அழகிய பொருள் புரிய
தெளிவு செய்த என் முதல் ஆசான்

நம் தேசீய கீதம் நம் உயிர் மூச்சு
தாக்கத்தை தந்த என் முதல் ஆசான்

எனக்குள் அறிவு பசியை ஏற்படுத்தி
ஊக்கம் தந்த என் முதல் ஆசான்

நம் மொழி நம் தேசம் நாமென்று
உடலினில் உயிராய் என் ஆசான்

என் ஆசானின் நிகழ கால படிப்பினை
என் எதிர் கால வாழ்வு நிலை

மனதில் நீங்காத நினைவாய் என் ஆசானை
எழுத்து கூட்டி வாசிக்கும் அவர் பெயரை

நாளும் என் தமிழாய் !
வாழும் என் வாழ்வாய் !!

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (5-Sep-13, 9:07 am)
பார்வை : 295

மேலே