புதுப்பூவான பருவப்பெண்ணுக்கு கும்மிப் பாட்டு
கும்மியடி பெண்ணே கும்மியடி
புதுப்பூ ஒன்று பூத்தது கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
அன்று முளைவிட்ட விதையொன்று
கொழுந்திட்டது கும்மியடி
இவன்குல வாழையும்
பூவொன்று விட்டது கும்மியடி
அடி கும்மியடி பெண்ணே கும்மியடி
திருநாளொன்று வந்தது கும்மியடி
புதுப்பூ நீராட ஆடவர் கைபடா
நீரோடு மஞ்சளிட்டு வரும்
பெண்களுக்கு கும்மியடி பெண்ணே கும்மியடி
புதுபூவை முறையிடும் முறைமாமன்
சீர் வருது கும்மியடி பெண்ணே கும்மியடி
படைசூழ வரும் முறைமாமனைக் கண்டு வேட்கமிடும்
புதுப்பூவின் வேட்கத்திற்கு
கும்மியடி பெண்ணே கும்மியடி
புதுப்பூவொன்று பூத்தது கும்மியடி
(((அடிப்பெண்களே அங்குமிங்கும் திறிகிற
ஆடவரை வெளியேற்றி கும்மியடிங்களடி)))
கும்மியடி பெண்ணே கும்மியடி
கந்தர்வ மாமன்களை வெளியேற்றி கும்மியடி
நேற்றைய மழலையும்
பருவம் பெற்று வருது
கும்மியடி பெண்ணே கும்மியடி
படைசூழ வந்த சொந்தங்களே
புதுப்பூவின் குலம் செழிக்க
வாழ்த்துங்களே
கும்மியடி பெண்ணே கும்மியடி
புதுப்பூவை சொந்தங்களுக்கு
நன்றிச்சொல்லி கும்மியடி
புனித மஞ்சளும் குங்குமமும் சேர்த்து
நீரிலிட்டு ஊர் கண்போக ஆர்த்தியெடுத்து
கும்மியடி பெண்ணே கும்மியடி
தலைநிமிந்திருக்கும் தென்னை ஓளையால்
தலைநிமிந்திருக்கும் தென்னை ஓளையால்
முறைமாமன் நெய்திட்டு கட்டிய
வசந்த மண்டபத்தில் புதுப்பூவான
பருவப்பெண்ணை அனுப்பி
கும்மியடி பெண்ணே கும்மியடி
இத்திருநாள் சிறப்படைய வந்த
பெருமக்களுக்கும் நன்றிச்சொல்லி
கும்மியடி பெண்ணே கும்மியடி
=== க.பிரபு தமிழன்