@@@ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் @@@

விட்டில் பூச்சிகளாய்
வீட்டைச்சுற்றியவர்களை
பட்டாம்பூச்சியாய் பறக்க
பரந்த உலகம் காட்டினீர்கள்

'அ'என்ற உயிரெழுத்தில்
தொடங்கி அந்தம்வரை
கற்கவைத்து உயிரினும்
மேலான கல்வியை போதித்தீர்

மூலையில் அமர்ந்தாலும்
மூளையோடு கற்க வைத்தீர்
ஆணென்றும் பெண்ணென்றும்
ஆசானாய் அன்னையானீர்

தோல்வியில் நானிருக்கையில்
தோல்வியே வெற்றிக்கு வேரென்றீர்
துவண்டிடாமல் நானிருக்க
தோழனாய் ஊக்குவித்தீர்

வெற்றியாளனாய் நானிருக்க
வெற்றியில்தான் உலகம்
உன்னை பார்க்குமென
பணிவுடன் இருக்கச் செய்தீர்

கல்வியோடு வாழ்வை
நன்முறையில் வாழ்வதற்கு
அறிவுரையும் அழகாக
எட்டும்படி எடுத்துரைத்தீர்


நூல்கொண்டு காகிதங்களை
வானில் ஏற்றிவிட்டு
கீழ்நின்று ரசித்து மனதில்
மகிழ்ச்சிக்கொண்டீர்

உணர்ந்தேன் நானிங்கு
உலகில் புனிதஇடங்கள்
இரண்டென்று ஒன்று
தாயின் கருவறை

===மற்றொன்று
பள்ளியின் வகுப்பறை
===கருவறையில்
உயிரை பெறுகிறோம்
===வகுப்பறையில்
அறிவை பெறுகிறோம்

(ஆசிரியர் தின நன்னாளில்
என் மனம் திறந்து சொல்கிறேன் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் )

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (5-Sep-13, 11:14 am)
பார்வை : 267

மேலே