ஆனந்தக் கண்ணீர்

மழையோடு போனது
என் கண்ணீரும்
உன் மகிழ்ச்சியால்...!

என் வீட்டு சன்னல்
கம்பிகள் எல்லாம்
ரசித்தது உன்னையே..!

அசைகின்றது
என் இமைகள்
ஆனந்தக் கண்ணீரில்...!

நனைந்தது
உன் முகம் கண்ட
கரு விழிகளும்...!

தேங்கின
நீர் குளங்களாக
என் வாசலும் இதயமும் ..!

மிதக்கின்றது
என் கால்கள்
என்னால் அல்ல
தானாகவே ...!

பூங்காவனம் ஆனது
வாழ்க்கை பூஞ்சோலையில்
உதிர்ந்த பூக்களில்
என் உயிர்...!

எழுதியவர் : தயா (5-Sep-13, 6:36 pm)
Tanglish : aananthac kanneer
பார்வை : 100

மேலே