அமெரிக்கா
கண்முன்னே கடவுள் தோன்றினார்
காலில் வீழ்ந்து காப்பாற்று என்றேன்
வரம் ஒன்று கேள் மகனே என்றான்
தமிழீழக் கிணறுகளை எண்ணெய்க்
கிணறாக்கு என்றேன்…..
தந்தேன் வரம் என்றான்…
எழுந்து பார்த்தேன்
கடவுளைக் காணவில்லை
திரும்பிப் பார்த்தேன்
அமெரிக்கன் அங்கே நின்றான்
எதற்கு வந்தீர் என்றேன்..
தமிழர் உருமைக்கென்றார்
சுயாட்சி எதற்கு தனிஈழம் தானென்றார்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்….
மீண்டும் கடவுள் வந்தார்
காலில் வீழ்ந்து நன்றி சொன்னேன்
வரம் ஒன்று கேள் மகனே என்றான்
எண்ணெய்க் கிணறுகளை
தண்ணீர்க் கிணறுகளாக்கு என்றேன்..
தந்தேன் வரம் என்றான்…
எழுந்து பார்த்தேன்
கடவுள் அங்கே நின்றார்
திரும்பிப் பார்த்தேன்
அமெரிக்கனைக் காணவில்லை.