பிறழ்
ஆரஞ்சுகளின்
பள்ளத்தாக்கில்
மாம்பழத்தின்
சுவையை
அறிந்தேன்
அரிவாள் காய்த்த
மரத்தில்
சாத்தான்கள்
தலைகள்
தொங்கக்கண்டேன்....
வயதானவளின்
ஒற்றை முடியில்
சரித்திரத்தை
படித்தேன்.
தாய கட்டைகளை
உருட்டினேன்.
எட்டு விழுந்தது.
எட்டை பாம்பு
விழுங்க
மீண்டும்
ஆரம்பத்திற்கே
வந்தேன்...
ஆரஞ்சுகளின்
பள்ளத்தாக்கில்
மாம்பழத்தின்
சுவையை
அறிந்தேன்.....