அழகிய ரசனையோடு ஒரு தொலைநோக்குப் பார்வை

தொலை நோக்குப் பார்வை வேண்டும்
தூய நினைவு மனசில் வேண்டும்.....!

தவழும் தென்றலாய் பழக வேண்டும்
தமிழ் மொழியிலே பேச வேண்டும்....!

உயிர்களெல்லாம் உறவாக
உண்மை அன்பு நெஞ்சில் வேண்டும்...!

உயிரற்ற பொருளும் அழகாக
உடனே நம் சிந்தையில் ரசனை வேண்டும்...!

கசப்பதும் இனிக்கும் ! காலமும் ஜொலிக்கும் !
கவலைகள் அழித்து - ரசனையே ஜெயிக்கும்...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (6-Sep-13, 12:12 pm)
பார்வை : 104

மேலே