+பசுமை நிறைந்த நினைவுகளே!+
பசுமரத் தாணி போல
நெஞ்சில் பதிந்த
பழைய நினைவுகள்
விலக மறுக்குதடி கிளியே!
உயிர எடுக்குதடி!
அசைந்து அசைந்து வரும்
அந்த நினைவுகள்
என் உசுர
அசச்சு போடுதடி கிளியே!
மனசபெசஞ்சு போடுதடி!
கிள்ளி கிள்ளி நீ
பேசிய பேச்சுக்கள்
என்காதில் வந்து
தினமும் வெடிக்குதடி கிளியே!
இதயம்துடிக்க மறுக்குதடி!
அள்ளி அள்ளி உன்மேல்
வச்ச பாசமெல்லாம்
வேஷமெனச் சொல்லி
விலகிச் சென்றாயடி கிளியே!
நெனப்பகளவிச் செல்வாயடி!