கணிதவதி.
பொங்கும்
எழில்பூத்த
புஷ்பவதி.
புத்தகம்
சுமக்கும்
சரசுவதி.
நிலம் பார்த்து
நடைபோடும்
நளினவதி.
மயங்க வைத்தாள்
பேரெழிலால்
மாயாவதி
மனசுக்குள்
மணியடித்த
மௌனராக
ரேவதி.
லயித்திருக்க
நினைவு தந்த
லட்ஜாவதி.
கண்ணுக்குள்
நிறைந்திருக்கும்
கலகவதி.
காணாத
பொழுதுகளில்
நரகாவதி.
என் கையால்
ஆகவேண்டும்
திலகவதி
என்றே தினம்தினம்
பட்ட அவதி.
இயல்பாய்
தெரிந்திருந்தும்
இதய நாற்காலியில்
இன்முகத்தோடு வந்து
அமராவதி.
ஒரு தலைக் காதலுக்கு
ஒரு நாள் வைத்தாள்
காலாவதி.
கல்யாணம்
செய்து கொண்ட
புண்ணியவதி.
களங்கம்
இல்லாத அந்த
புனிதவதி.
கடைசிவரையில்
புரிந்து கொள்ள முடியாத
கணிதவதி.!