உன்னைத்தானடி
உருகி உருகி நான் கேட்டது
உன்னைத்தானடி ..!
உயிரணுவும் யாசித்தது
உன்னையேத்தானடி ..!
ஓடும் நேரமும் என்னுள் உறைந்தது
உனக்கத்தானடி ..!
சண்டையிட்டதும் உன்னையே
சார்ந்திருக்கத்தானடி ..!
நிஜத்தில் எனை தீயிலிட்டு நினைவிலிருக்க
அழைக்கிறாயடி ..!
ஆழ்கடல் ஆழம் அறிந்தவரில்லை ..!
ஆழ்கடலே ஆழமென அறியாதவருமில்லை ..!
அறிவேனடி உன் காதலாழமும் எண்ணிக்கையில் இல்லையென்றாலும் என்னளவில் அறிவேனடி..!
என் முழு நிலவே நித்திரையிலும் என் - நினைவால்
பூன்னகையில் பூத்திரு..!
பூவிழியோரம் இன்னமும் நீ சேர்க்கும் - நீரலைகளை
நிறுத்தி விடு..!
நின்று கொல்லுதடி எனக்கென வழியும் - உன்
ஒரு சொட்டு விழி நீர்..!
என்னவனுக்காக மட்டுமே கவி வருமென இருந்தேன்..!
என்னில் இருந்தவளுக்கும் வருமென அறிந்தேன்..!
எதுவும் நம்மை கடந்து போகும்
உண்மை தான் கடந்தேன் - நானும்
கடின நாட்களை..!
தனிமையில் சில நிமிடம்..!
வெறுமையில் சில நிமிடம்..!
நிலவற்ற இரவோடு சில நிமிடம்..!
கண்ணீரில் நனைத்த பஞ்சனையோடு சில நிமிடம்..!
உனக்காய் எழுதிய கவியோடு சில நிமிடம்..!
வெள்ளம் வந்த நதியென இருக்கிறேன்..!
வெண் பனி இரவில் உன் நினைவுகளோடு..!
எதையும் ஏற்க தானே வேணும்..!
ஏற்கிறேன் பிரிவையும்
இருந்து வருந்துவதை விட - பிரிந்து
நேசிக்கிறேன் பிரியமானவளை..!
எழுதினேன் உனக்காக கவி
என்னையே எழுத்தில் ஏற்றியிருக்கிறேன்
ஏற்றுக்கொள்..!
என்றும் ப்ரியங்களுடன்
ப்ரியா