விடைகொடு விடைகொடு மண்ணே...!
விடைகொடு விடைகொடு மண்ணே
விழிநீர் வந்துனைத்தொடு முன்னே
தடைபல தகர்க்கும் தன்மானம்
கடைமூச்சிலும் என்னின்று காக்கும்
விடைகொடு விடைகொடு மண்ணே
விழிநீர் வந்துனைத்தொடு முன்னே
===================================
படித்த படிப்புக்கோ விலையில்லை-ஆள்
பிடித்து கொடுக்க பொருளில்லை
மடிமேல் சுமந்த தாய்மண்ணே-உனைவிட்டு
விடியலை தேடியே ஓடுகின்றேன்
விடைகொடு விடைகொடு மண்ணே
விழிநீர் வந்துனைத்தொடு முன்னே
====================================
காசற்றவனை வெறுக்கும் சுற்றம் -அதில்
வசப்பட்டு வாழ்வை இழப்பதோ குற்றம்
நேசங்கொண்டு நெஞ்சில் தாங்கிய சொந்தம்
வசந்தம் கொள்வதேஎன் வாழ்வின் உந்தம்
விடைகொடு விடைகொடு மண்ணே
விழிநீர் வந்துனைத்தொடு முன்னே
==============================
இனியில்லை வாழ்வில் இனிமை என்றாலும்
துணிந்துமுன் னோடுதே துயருண்ட நெஞ்சம்
தனிமையை வென்றிட தமிழ்வந்து கொஞ்சும்
கண்ணீரைத் துடைத்திட தலையணை மிஞ்சும்
விடைகொடு விடைகொடு மண்ணே
விழிநீர் வந்துனைத்தொடு முன்னே
====================================
முடியும் வரையிலும் நாடோடிப் பார்க்கிறேன்
மடியும் முன்னேஉன்னை வந்து சேர்கிறேன்
விடைகொடு விடைகொடு மண்ணே
விழிநீர் வந்துனைத்தொடு முன்னே
===============================