நிமிர்ந்து நிற்கும் எல்லைக் காவலன்

ஏ கோபுரமே.....

நிமிர்ந்து நின்று நீ

இடியைத் தாங்கி எம்

உயிரைக் காக்கின்றாய்......!

நன்றி.....

என்றாலும் உன் கம்பீரம்

எல்லையில் இருக்கும்

எமது தோழமையின் கம்பீரத்தில்

தோற்றுத்தான் போய் விடுகிறது......

எனவே.......

சிவ சிவ என்று சொல்வதை விட....

ஜெயஹிந்த் என்றே சொல்லி வணங்குகிறேன்...

கடவுள் என்னை கோபிக்க மாட்டார்

காரணம் அவருக்கு நன்றாகத் தெரியும்

பக்தியை விட கடமை மிகப் பெரியது என்று

ஜெய் ஹிந்த்......!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (6-Sep-13, 7:08 pm)
பார்வை : 62

மேலே