வளமான சுதந்திரம் ..
சுகாதாரமற்ற சுதந்திரத்தை
கல்வி அறிவின் மூலம் களைய
கம்பீரமாய் கொடி பிடிப்போம்...
"அங்கீகாராம்" என்ற அடை மொழியால்
அராஜகத்தில் ஈடுபடும் கல்லூரி
மாணவர்களை
சிந்திக்க வைக்க முயற்சி வைப்போம்!
"ஆளுமை" அதிகாரமுடன்
சுதந்திரத்தை சிதைக்கும் மனிதர்களை
நிறை மனிதர்களாக மாற்ற செயல் படுவோம்!
சுதந்திரத்தால் காதல் என்ற கம்பி வலையில் சிக்கி
காயங்களை சந்திக்கும்
இளைங்கர்களை சிந்திக்க வைக்க முயலுவோம் !
வன் முறைகளை வேரோடு களைந்து
வாழ்வின் நோக்கத்தை தொலைக்காமல்
விழிப்புடன் காத்து விண்ணளாவிய சுந்தந்திரத்தை
வாழ்வை வளமாக்க பயன் படுத்துவோம்!