தவித்தாள்...... தவிர்த்தாள்
( த விலிருந்து தௌ வரை )
தன்னந் தனியே வெறித்தப்படி அமர்ந்திருந்த,
தாரணியின் கன்னங்களில் உருண்டோடின, நீர்
திவலைகள் போகும் இலக்கை அறியமுடியாமல்.......
தீயாய் உமிழ்ந்த அவன் வார்த்தைகளின் கொடூரம்,
துகிலுரித்து பட்டப்பகலில் நடுவீதியில் நிறுத்தி,
தூக்கிலில் போடப்பட்ட உணர்வினை ஏற்படுத்தியது.....
தெள்ளத்தெளிவாக புரிந்து விட்டது அவளுக்கு....!
தேளாய் கொட்டிவிட்டு மீளாதுயரில் ஆழ்த்தியவன், எந்த
தைரியத்தில் மீண்டும் அவளைத் தேடி வருவான்...?
தொடர்வண்டி போல் அணிவகுக்கும் சோகங்கள்,
தோண்டுகின்றன அவள் சவக்குழியை மெல்ல மெல்ல....
தௌவை இவள் என்ற அவன் கூற்றினை செவிமடுக்கும்
தரணியின் தூற்றுதல்களுக்கு ஆளாகும் முன்,
தாரணியாக இவ்வுலகத்தை விட்டு விலகிட முடிவு செய்தாள்.
தௌவை - மூதேவி
***********-------------***********----------*********----------