தானம் இது என் மரண சாசனம்

என் பிடரியின்
பின் ஆசனத்தில்

பிம்பங்களில்லா பிரளயமாய்
என் மரணம்

நீர்க்குமிழி போல
உப்பிக்கிடக்கிறது !

சில கனப்பொழுதில்
நிமிடங்களை வினாடிகள்
விழுங்கிவிடவும்கூடும் .

அந்த நிகழ் பொழுதில் நான் !

பிணமெனும் பிண்டமாய்
மா ( நா ) ரிப் போவேன்

ஆனாலும்

நான் எனும் நான் செத்து

நீ ஆகி
உன் இதயமாக

அவனாகி
அவன் இரு கண்களாக

அவளாகி
அவள் உள் உறுப்பாக

இவ் வையகத்தில்
வாழ்வாங்கு வாழப் போகிறேன் !

எழுதியவர் : பிரகாசக்கவி - (7-Sep-13, 11:33 pm)
பார்வை : 64

மேலே