இது தான் காதலா...........

இருபது வருடம் பழகிய உலகம்
உன்னை பார்த்த நொடி முதல்
புதிதாய் தெரிய.....
காணும் காட்சி எல்லாம்
விழிவிட்டு மறைய..
உன் முகம் மட்டுமே
காட்சியில் நிறைய..
வானவில் வண்ணம் போல்
உந்தன் நினைவு சாயம்
என் நெஞ்சில் பூசிவிட்டு
வார்த்தை ஏதுமின்றி மறைந்தவளே ..
கண்ட போதிலே காதல் பிறக்குமென்று
சொல்லி பார்வையிலே அறைந்தவளே ..
உன்னை மறுமுறை காண துடிக்கின்றேன்
அதுவரை உன் நினைவினிலே
என் நொடிகளை வடிக்கின்றேன்..
இதுதான் காதலா அறிந்ததில்லை
இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததுமில்லை ...........

எழுதியவர் : (9-Sep-13, 10:51 am)
சேர்த்தது : Kvkumar
பார்வை : 81

மேலே