+நிலாப்பாட்டு!+
இளவேனில் காலத்து இளம்நிலவே!
***இனிமையைத் தந்திடு உளம்நிறைய!
பளபளவென்று நீ மின்னுகிறாய்!
***பனியினைப்போல் வெண்மன நிலவே!
கலகலவென்று நீ சிரிக்கவேணும்!
***கதிரவத் தாயை துதிக்கவேணும்!
உலகம் முழுதும் உலவுகின்ற
***உள்ளம் கவர்ந்த வெண்ணிலவே!
நித்தம் நீயும் வாராமல்
***நீங்கி சிலநாள் செல்வதுஏன்?
புத்தம் புதியமலரே நீ
***பூமியின் மேலுள்ள விளக்கே!
சத்தம் ஏதும் செய்யாமல்
***சன்னதி மலர்போல் மணக்கின்றாய்!
வித்தகரின் மனம் கவர்ந்தவளே!
***விண்ணகத்தில் துள்ளும் இளமானே!
சமுத்திர வானில் நீந்திச்செல்லும்
***சின்னச் சின்ன மீன்களுடே
திமிங்கலம் போலத் தெரிகின்றாய்!
***திரண்டிடும் மேகத்தில் மறைகின்றாய்!
அமைதியை அடைந்திட வழிசொல்வாய்!
***அன்பினை பொழிந்திடும் மொழிசொல்வாய்!
சமுதாய வானத்தில் உயர்ந்தவளே!
***சமுதாயம் உயர்ந்திட வாய்திறப்பாய்!
சரித்திரம் உன்னை புகழுவதேன்?
***சந்தன நிலவே விடைசொல்வாய்!
உரிமையாய் வானில் உலவுகின்றாய்!
***உண்மைசொல் எப்படி நீசொந்தம்?
வறுமையுள் பிணைந்துள்ள பசியினைப்போல்
***வழக்கமாய் கிழிந்துள்ள அடையைப்போல்
சரிநிகர் சமான மாயுள்ளாய்!
***சதுரத்தின் எதிரி நீயோ?