+இன்று நாம் பிறந்தோம்!+

இன்று நாம் பிறந்தோம்!
நல்லதை வாழவைப்போம்!
கெட்டதை வீழவைப்போம்!
உள்ளத்தை நாம் கொடுப்போம்!
உறவினைத் தான் வளர்ப்போம்!
விண்ணிலே நாம் பறப்போம்!
விந்தைகள் பல புரிவோம்!
மண்ணிலே மாலை தொடுப்போம்!
கண்ணிலே கவிதை வரைவோம்!
கடலுக்குள் ஆலை அமைப்போம்!
காற்றின்மேல் சாலை அமைப்போம்!
வானத்தை அணிந்து கொள்வோம்!
கானத்தை பருகிச் செல்வோம்!
நிலவுக்கு குடி பெயர்வோம்!
களவுக்கு அடி கொடுப்போம்!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்!
பாட்டுக்கொரு அறம் வளர்ப்போம்!