கொள்ளிய சொருகிய என் செல்லமே
வேணாமின்னு நினைகலேன்னு
வேதனைய குறைச்சு நெஞ்சில்
பூ அள்ளி போட்ட என் தங்கமே
வேனுமின்னும் நினைகலேன்னு
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே
கொள்ளிய சொருகிய என் செல்லமே -எரியற
கொள்ளிய சொருகிய என் செல்லமே
பிரியமா இருந்த கதை ஓராயிரம்
புரிஞ்சு இருந்த கதை நூறாயிரம்
சேர்ந்து இருந்த கதை யார் பார்த்தது
சேராம இருந்த கதை ஊர் பார்த்தது
உள்ளுக்குள்ள உன்னைய வெச்சேன்
ஊருக்கெல்லாம் மறைச்சுவச்சேன்
உள்ளத்துல உன் நெனைப்பெ
ஊர்வலமா போகவெச்சேன்