கட்டுப்பாடு

கீழே விழ நேரிடும்
அல்லது அவர்கள் பறித்துச் சுவைப்பார்கள்
என்பதை
அறிந்திருப்பின்
பழுத்திருக்கமாட்டேன்
காய்த்திருக்கமாட்டேன்
பூத்திருக்கமாட்டேன்
என்று
தொடராக சிந்தித்துக்கொண்டிருந்த
கனி நிறைந்த மரங்கள்
வந்த வழியே திரும்பிச் சென்றுகொண்டிருக்கின்றன.
அந்தச் சுதந்திரத்தை வழங்காதவனைச் சிந்தித்தேன்
வானமாகத் தெரிகின்றான்.

எழுதியவர் : அகமது ஃபைசல் (10-Sep-13, 7:32 am)
பார்வை : 74

மேலே