காதலெனும் வைரஸ்
காதலெனும் வைரஸ் பரவுவது
காரணம் இயற்கை தானா
இளமையில் வரும் நோயா
பருவத்தின் கோளாறா
இதயங்களின் ஈர்ப்பா
திரைப்படமே இடரா
மனங்களின் மகரந்த சேர்க்கையா
களவாடிடும் கன்னிகளா
வேதியியல் மாற்றமா
வட்டமிடும் வண்ணத்துப் பூச்சிகளா
நோட்டமிடும் பார்வையாலா
நிலவான முகங்களா
விழிகள் விடும் அம்புகளா
முத்துப்பல் சிரிப்பிலா
மயக்கிடும் அழகிலா
பாவைகளின் பாசத்திலா
வார்த்தைகளின் மாயத்திலா
தெரியவில்லை எனக்கும்
தப்பித்தேன் நானும்
வலையில் சிக்காமல்
வைரசும் எனை தொடாமல்
காதலெனும் நோயில் படுக்காமல் !
பழனி குமார்