அனைவரும் ஒன்றே

இயற்கையெனும் இளையகன்னிகள்
இவ்வுலகில் நிறைந்து இருப்பினும்
செயற்கையை நோக்கியே செல்லும்
செம்மறி ஆட்டுக் கூட்டங்கள் தான்
எங்கும் எதிலும் காண்கிறோம் !

அனுபவிக்க தெரிந்தவன் மனிதன்
அணு அணுவாய் ரசிக்கக் கூடியவன்
இருந்தும் தன்னிலை மறக்கிறான்
இயற்கை அழகை காண மறுக்கிறான்
என்று மாற்றிடுவான் மனநிலையை !

ஒருவழிப் பாதையை விரும்புகிறான்
ஒன்றிடும் உலகையே வெறுக்கிறான்
சாதிமத வெறியால் பிரிகின்றான்
சங்கமிக்க முடியாமல் திரிகின்றான் !

காலஅளவு தெரியாது காலன் வருவது
காலத்தும் இணையாமல் இருக்கின்றான்
இறுதி நொடி வரை ஏற்க மறுப்பதேன்
இறைவன் தனித்தனியென புலம்புவதேன் !

பகுத்தறிவு பாதையை வெறுப்பதேன்
வகுத்து வாழ்ந்திட தயங்குவதேன் !
அன்றாடும் வளரும் அறிவியல் உலகில்
அனைவரும் ஒன்றே மனதில் கொள்க !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Sep-13, 8:33 am)
Tanglish : anaivarum ondrey
பார்வை : 173

மேலே