உலக தற்கொலை தடுப்பு தினம் ( 10.09.2013 )

மரணம் என்பது நிச்சயம் ஒருநாள்
மறுக்கும் மனிதன் மண்ணில் இல்லை !
முடிக்கும் எண்ணம் முடிவே ஆகாது
முடிந்திடும் என்று நினைக்க கூடாது !
தற்கொலை ஒன்றே வழியென்றால்
கற்கால மனிதன் அவனே என்போம் !
காதல் தோல்வி வறுமையின் விரக்தி
கடனே தொல்லை இவை காரணங்களா !
தேர்வில் தோல்வி குடும்பத்தில் குழப்பம்
கள்ளக் காதல் பங்கீட்டில் பிரிவினை !
அடுக்கலாம் அடுத்தடுத்து மேலும் பல
முடிவின் எல்லை தற்கொலை அல்ல !
சிந்திக்க வேண்டும் சிந்தையுள்ள உயிரே
நிந்திக்க வேண்டாம் சொல்வதால் என்னை !
சாதிக்க வேண்டும் பிறந்து வளர்ந்ததால்
போதிக்க வரவில்லை நானும் புத்தனாய் !
வெற்றியின் சிகரம் தற்கொலை இல்லை
வீரத்தின் சின்னம் வாழ்ந்து சாதிப்பதில்
இதயத்தில் நிறுத்துங்கள் இன்றுமுதல்
தற்கொலை முடிவை தடுத்து வாழுங்கள் !
பழனி குமார்