தாய்மை
தண்ணீர் தேசத்தில்
முண்ணூரூ நாள் நீந்தி
கரையைக் கடந்தவுடன்
கணீரென்று குரலெழுப்பி
மண்ணுக்குப் பெருமை சேர்க்கும்
இன்னொரு ஜீவன் நானென்று
பொக்கைவாய் சிரிப்பினிலே
சிக்கனமாய் முத்துதிரும்
நாள் எதுவோ? நாள் எதுவோ?
நீ சொல்லு ஆண்டவனே !
என்று ஏங்குகின்ற பெண்களுக்கு
ஆண்டவன் அருளிய சீதனமே தாய்மை!