பனிவிழும் பொழுதுகள்
டக்.... டக்....... கதவு திறந்த சத்தம் குளியல் அறையை விட்டு வெளியே வந்து கொண்டு இருந்தான் கௌதம் ,தலையை துவட்டிக்கொண்டு மெதுவாக நாற்காலியில் அமர்தான் மணி 9.43 இருக்கும் மன இறுக்கத்துடன் தலையை சாய்த்தான் ,கண்களை மூடினான். பழைய நினைவுகள் கண்முன்னே நிழலாட ஆரம்பித்தன .அவன் மனம் அவனிடம் பேச ஆரம்பித்தது .
என் பெயர் கௌதம் ,கௌதம் சிவராமன் அப்பா பெயர் சிவராமன் ஒரு தபால் அதிகாரி , அம்மா பெயர் லதா,லதா சிவராமன் நான் அவர்களுக்கு ஒரே பையன் .சிறிய குடும்பம் எங்கள் வீடு ஒரு வாடகை வீடு எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும் எங்கள் வீடு .
நான் படித்தது அரசு பள்ளியில் ,ஒரு சாதாரண மாணவன்தான் கொஞ்சம் கொஞ்சம் படிப்பேன் ஆனால் அதிகம் சிந்திப்பேன் எல்லா பாடமும் பிடிக்கும் கணிதம் உட்பட ஆனால் ஆங்கிலம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது .
எனக்குனு சில ஆசைகள் இருந்தது ஒரு சொந்தவீடு கட்டனும் அது சின்னதா இருந்தாலும் பரவாஇல்லை ஆனா அழகா இருக்கணும் ,ஒரு நல்ல வேலைக்கு போகணும் ,அதிக நேரத்தை அப்பா அம்மாவுடன் கழிக்கணும் ,அதிக புத்தகம் படிக்கணும் ,நபர்களிடம் நட்பை மிகவும் பத்திரமாக பாதுகாக்கணும் ,மாலை நேரத்தையும் விடியற்காலை பொழுதையும் அதிகம் ரசிகனும் என்று எல்லாம் ஆசை.
என்னுடைய ஆசைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தன பொதுதேர்வை நன்றாக எழுதினேன் விடுமுறை நாட்களை நன்றாக கழித்தேன் தேர்வுமுடிவுகள் வெளிவந்தது நல்ல மதிப்பெண் .அடுத்தது கல்லூரி வாழ்கை ,வித்தியாசமான பல அனுபவங்கள் வித்தியாசமான பல ஆசிரியர்கள் ,பல நண்பர்கள் ,வித்தியாசமான சூழ்நிலைகள் என்று அடுத்தடுத்து பல புதிய அனுபவங்கள் சந்தோஷமாக இருந்தது என்னுடைய கல்லூரிவாழ்கை .
எப்படியோ நான்நினைத்த மாதிரியே ஒரு நல்ல வேலைக்கு போனேன் என் கனவு இல்லத்தை கட்டி முடித்தேன் சின்னதா தான் இருந்தது ஆனால் ரொம்ப அழகா இருந்தது ரசித்து ரசித்து கட்டினேன் வீட்டிற்கு அப்பா அம்மா பெயர் வைத்தேன் ,அப்பா அம்மா விடம் வீட்டிற்கான பத்திரம் ,பட்டா எல்லாம் பைல் பண்ணி கொடுத்துட்டு அவர்களிடம் சொன்னேன் இதுநமது வாடகை வீட்டிற்கு ஒரு முடிவு இனி நாமும் சொந்தவீட்டிற்கு உரியவர்கள் என்று , அப்பொழுது அவர்களின் கண்களில் அப்படி ஒரு சந்தோஷம் தெரிந்தது வாழ்கையில் எதையோ சாதித்த சந்தோஷம் எனக்கு அப்பொழுது .
இப்படி எல்லா சந்தோஷங்களும் ஒவ்வொன்றாக நடந்துகொண்டு இருக்கும் போது திடிர் என்று எனது வாழ்க்கையில் வந்த புதிய சந்தோஷம் தான் நிவேதா .எனக்கு வாழ்கையின் புதிய புதிய பரிணாமத்தை காட்டியவள் .
நிவேதா ..........
நிவேதா ஜெயகுமார் .......
ஒரு பூந்தோட்டம் போல் என் வாழ்க்கைக்குள் நுழைந்தால்
தென்றலாய் வீசினால் ,பூக்ககலாய் பூத்து குளிங்கினால்
அவளை முழுமையாக சுவாசித்தேன்
இப்படி எனது வாழ்கை எனும் வாலிப பருவத்தில் காலையில் நுழைந்த அவள் ,அந்த பூந்தோட்டம் மாலையை அடைவதற்குள் வாடிவிட்டது .
நிவேதா ஜெயகுமார் ........
அவளை நான் முதன்முதலில் பார்த்தது ஒரு இனிய காலை பொழுதில் ,இனிய அந்த காலை நேரத்தில் பனிவிழும் அந்த விடியற்காலை பொழுதில் குளிர்ந்த அந்த தென்றல் காற்றை சுவாசித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு லட்சம் வெண் தாமரை மலர்கள் ஒன்று சேர்ந்து வந்ததுபோல் இருந்தது எனக்கு அவளை பார்த்த அந்த நிமிடம் .
அவளை பார்த்த அந்த நொடி ஒரு கவிதையை போன்று என் கண்முன்னே அடிகடி வந்து சென்றது என்னால் நம்ப முடிய ஒரு நாள் என் நண்பனின் பள்ளியில் ஒரு விழா நானும் சென்று இருந்தேன் பெரிய பள்ளி .
என்ன ஆச்சாரியம் அங்குதான் அவளை நான் மீண்டும் சந்தித்தேன் ஒரு ஆசிரியை ஆக !!!நேர்த்தியான சேலையில் ஒரு ஆசிரியை குண்டான மிடுக்குடன் நான் அவளை பார்த்தேன் . என்னால் இன்னும் நம்பமுடியவில்லை அவளை பார்த்த கொண்டு இருந்த அந்த ஒரு சில மணி நேரங்களை மறக்க முடியவில்லை .
அவளை பார்த்த அந்த நிமிடத்தை வர்ணிக்க எனக்கு வார்த்தையே இல்லை அவளிடம் அப்படி ஒரு அழகு கொட்டி கிடந்தது .
ஒரு பேரழகியாக ,ஒரு தேவதியாக தெரிந்தால் எனக்கு அவள் அப்பொழுது . அதன்பிறகு அடிகடி அவள் ஜாபகம் எப்படியாவது அவளிடம் பேசவேண்டும் என்று ஆசை . இப்படியே இரண்டு மாதங்கள் கழிந்தன இவ்வாறு என்னை அறிமுகபடுத்திகொண்டு இருக்கும் நான் என்னை பற்றி ஒன்றை கூர மறந்து விட்டேன் .
"Yes I am a guitarist"
நான் ஒரு கிட்டரிஸ்ட் பள்ளியில் படிக்கும் போதே அதை கற்று கொண்டேன் அதிகம் வாசிக்க மாட்டேன் ஆனால் அதிகம் மற்றவர்கள் வாசிப்பதை ரசிப்பேன் ஆனால் இப்போது அதுதான் எங்களை இணைத்து எனலாம் .
Tamil nadu Guitar music association ,st peter's college ல ஒரு விழா ஏற்பாடு செய்து இருந்தாங்க young guitarist எல்லாம் கலந்துகிட்ட அந்த விழாவில் நானும் கலந்துகிட்டேன் அங்குதான் நான் அவளை நான் திரும்பவும் சந்தித்தேன் .மிகபெரிய சந்தோஷம் எனக்கு அப்பொழுது கூடவே ஒரு விபரீத ஆசையும் வந்தது எனக்கு அப்பொழுது .
மற்றவர்கள் வாசிப்பதை பார்பதற்காக சென்ற நான் நீண்டநாட்கள் கழித்து வாசிக்க ஆசைப்பட்டேன் அவளுக்காக ,அவளை நினைத்து ஒருமுறை .முன்பே பயிற்சி செய்யாமல் வந்த இந்த ஆசை கண்டிப்பாக எனக்கு ஒரு பேராசை தான் ஆனாலும் தைரியமாக மேடையேறினேன் . அவளை முழுமையாக நினைத்துகொண்டு அவளின் கண்களை மட்டும் பார்த்துகொண்டு இருந்தேன் வாசித்து முடிக்கும் வரை, முடிவில் நான் சிறப்பாக வாசித்ததாக கூறினார் நான் வாசித்து ஒரு கவிதையை போல் இருந்ததாக கூறினார் எல்லோரும் .
நான் நினைத்துகொண்டேன் ஒருகவிதையே எதிரில் இருக்கும் போது ,ஒரு கவிதைக்காக வாசித்த இந்த இசை ஒரு கவிதையை போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும் என்று .
பின்பு அவள் என்னை நோக்கி வந்தால் தன்னை அறிமுகபடுத்திகொண்டால் மிகவும் அழகாக இருந்தது நீங்கள் வாசித்தது என்று கூரினால் .சிறிது நேரம் கழித்துவிட்டு ஒரு வித தயக்கத்துடன் என்னை பார்த்து கேட்டல் ..!!
ஏன் நீங்கள் வாசிக்கும் பொழுது என்னையே பார்த்து கொண்டு இருந்தீர்கள் விடாமல் என்று .........!!!
எனக்கு பக் என்று ஆகிவிட்டது என்ன கூருவதேன்றே தெரியவில்லை சிறிது நேரம் அப்படியே அமைதியாக இருந்து விட்டேன் நான் .
ஆனால் அவள் விடவில்லை மீண்டும் கேட்டல் ஏன் என்று கண்களாலையே ..நான் கூறினேன் அழகான ஒன்றை பார்த்து கொண்டே இருக்கும் போது நாம் செய்யும் அனைத்தும் அழகானதாக இருக்கும் மற்றவர்கள் ரசிக்கும் படி ,எல்லோரும் நான் வாசித்து ஒரு கவிதையை போன்று இருந்ததா கூரியதற்கு காரணம் ஒருவேளை இதுவாககூட இருக்கலாம் என்று .
நான் அவ்வாறு கூரியவுடன் அவள் அங்கிருந்து நகர்துவிட்டால் வேகமாக ஆனால் கோபமாக இல்லை ஒரு வித வெட்கத்துடன் ,நான் ஏங்கினேன் ஒரு பரிதாபத்திர்காகவாவது அவள் என்னை திரும்பி பார்க்க வேண்டும் என்று .என்னால் நம்பமுடியவில்லை அவள் என்னை நோக்கி மீண்டும் வந்தால் .உங்கள் பெயர் என்ன என்று கேட்டல் .....!!!கௌதம் சிவராமன் என்று கூறினேன் அவள் உடனே glad to meet you என்றால் .!!பிறகு தனது இடக்கையால் தலையை வருடிக்கொண்டு ஒரு மெல்லிய புன்சிரிப்பு அவளிடம் இருந்து .
நீங்களே நினைத்து பாருங்கள் எனக்கு அப்பொழுது எப்படி இருக்கும் என்று!!
"என் இதயம் ஒரு வினாடிக்கு 144 முறை துடித்தது ,
"எனது கைகளும் கால்களும் முகலாயர்களின் தூண்களை போல் மாறின,
"எனது கண்கள் அப்பொழுது மட்டும் அவளை பார்கவேண்டம் என்று கூறியது ,
"எனது தொண்டை எனது எச்சிலை விழுங்க மறுத்தது ,
இதற்குமேல் நான் என்ன கூறுவது அப்பொழுது உணர்ச்சி அற்ற ஒரு மரமாகவே மாறிவிட்டேன் .
அப்பொழுது அவள் கூரினால் என்னிடம் சிரித்துக்கொண்டே ,நீ வாசிப்பதை விட பேசுவது இன்னும் கவிதையை போல் அழகாக இருக்கிறது என்று .
பிறகு இருவரும் ஒருவழியாக நண்பர்கள் ஆனோம் அடிகடி வெளியில் சந்தித்துகொள்வோம் ,தொலைபேசியில் பெசிகொள்வோம் நாட்கள் செல்ல செல்ல எங்கள் நட்பு மிகவும் வலுவடைந்தது .
காரணம் எங்களின் எண்ணங்களும் செயல்களும் ஒரே மாதிரியாக இருந்தது ..!!அவளை பற்றி கூரவேண்டும் என்றால் அவளுக்கு அழகானவற்றை ரசிக்க தெரிந்து இருந்தது .
அவளுக்கு சரியானது எது தவறானது எது என பகுதரியதெரிந்து இருந்தது ,
அவள் முடிவெடுக்க வேண்டிய வேளையில் மனம் சொல்வதை விட மூலை சொல்வதையே அதிகம் கேட்பாள் ,
அவள் மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்க கற்று கொண்டு இருந்தால் ,
அவளின் சிந்தனையும் செயலும் ஒன்றாக இருந்தன ,
இந்த சமுகத்தின் மீது அதிகம் அக்கறை கொண்டு இருந்தால் ,
செய்திகள் வாசிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தால் ,
புத்தகம் படிப்பதை அதிகம் விரும்பினால் ,அதை படிப்பதோடு நிறுத்தி விடாமல் சேமிக்கவும் கற்றுக்கொண்டு இருந்தால் ,
ஒருவரை புகழ்வதிலும் இகழ்வதிலும் எல்லையை கடைபிடித்தால் ,
ஒருவரின் குறையை கூருவதை விட அதை அவருக்கு உணர்த்த தெரிந்து வைத்து இருந்தால்,
தூமையையும் வெண்மையையும் விரும்பினால்,
கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுத விரும்பினால்,
தனது துன்பங்களை விட மகிழ்ச்சியையே மற்றவர்களிடம் பகிர்துகொள்ள விரும்பினால் ,
எப்பொழுதும் எதையும் பாசிடிவ்வாக எண்ணினால் ,
வெற்றியையும் தோல்வியையும் ஒன்று தான் என்றால் ,
திறமையானவர்களை மதித்தால் அதைவிட திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாதவர்களை மிகவும் மதித்தால் மொத்தத்தில் அவள் ஒரு பெண் என்பதையும் தாண்டி ஒருத்தியாக இருந்தால் .
அவள் எனக்கு ஒரு தேவதையாக ,பேரழகியாக தெரிந்தால் ,அவளிடம் அப்படி ஒரு அழகு கொட்டி கிடந்தது ,காட்டு மிராண்டி தனமான அழகு அவளிடம் இருந்தது ,அது கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கே தெரியாமல் என்னை தின்றது .
இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும் அவளை ரசிக்க என் வாழ்கையை அவலுடன் இனது கொள்ளவிரும்பினேன் ,அவளை நான் நன்றாக பார்துகொல்வேனா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அவள் என்னை நன்றாக பார்த்துகொள்வாள் என்று தோன்றியது ,அவள் என்னை எல்லா வகையிலும் ஆதரிப்பல் ,என் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருப்பால் என்று என்னினேன் எனவே அந்த காட்டு அழகியை நான் நேசித்தேன் .முழுமையாக ...
ஒரு நாள் மாலை நேரம் ,தென்றல் காற்று தேன் சிந்தியது ,வானவில் மனதை வருடியது,மேகங்கள் எங்களுக்கு குடை பிடித்தன .மனம் மிகவும் மென்மையாக இருந்தது .
அவள் கூறினால் என்னிடம் ,எனக்கு இப்பொழுது ஒன்று தோன்றுகிறது அது சரியா தப்பா எனக்கு தெரியல ஆனா சொல்லிடறேன் உன்னிடம் அதை ..
இப்பொழுது எல்லாம் உன்னை என்னால் நேராக பார்க்க முடியவில்லை ,காரணமும் தெரியவில்லை அதற்கு .
எனக்கு எப்பொழுதும் உன்னுடனே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது
எனவே நான் எப்பொழுதும் உன்னுடனே இருக்கவேண்டும் என்று ஆசைபடுகிறேன்
என் வாழ்கையை உன்னுடன் இனைக்க ஆசைபடுகிறேன்
எனக்காக நீ இருப்பாய் என்று நம்புகிறேன் ,
நான் சொல்வது சரியா ??தப்பா ??
நீங்களே சொல்லுங்கள் இப்பொழுது நான் என்ன கூறுவது ??அவளிடம் என்று!!
நான் கூறினேன் அவளிடம் .......!!
" I Love You ....!!!!
ஒரு சிறிய மௌனம் இருவருக்கும் இடையில்
" I Too Love You .....!!
என்ன அழகான நிமிடங்கள் அவை !!
எல்லோரும் கூறுவர் பனிவிழும் பொழுது என்பது விடியற்காலை தான் என்று .ஆனால் நான் கூறுவேன் இதுதான் எனக்கு பனிவிழும் பொழுது என்று .
காரணம் அவ்வளவு மென்மையாக இருந்தது என் மனம் அப்பொழுது .
நான் நினைத்தது ,நான் காத்கொண்டுடுஇருந்தது இந்த நிமிடதிர்காகத்தான் .
நான் தேடி கொண்டு இருந்த வார்த்தைகள் அவளிடம் இருந்து வந்த அந்த வார்த்தைகள்தான் .
நாட்கள் அழகாக இருந்தன அதன் பிறகு ...
அவளை விட அவளின் சிந்தனைகளும் ,மனமும் அழகும் மிகவும் அழகாக இருந்தன .
எனவே அவளிடம் பேசும் போது நேரம் போவதே தெரியாது .
இனிமையான பொழுதுகள் அவை ,என்னை பொறுத்தவரை அவலுடன் இருந்த ஒவ்வொரு பொழுதும் ..!!
" பனிவிழும் பொழுதுகளே "
வாழ்க்கை எனும் கப்பல் வேகமாக பயணித்து கொண்டு இருந்தது .
இந்த வாழ்க்கை ஒரு சக்கரம் போன்றது அது மேட்டிலும் ஏறும் பள்ளத்திலும் ஏறும் என்பதை எனக்கு புரியவைத்த நாள் !!!!!!!
அன்று மாலை சுமார் ஒரு 5 மணி இருக்கும் ...
"Garden of india என்ற ஒரு பார்க்கில் நான் அவளை சந்தித்தேன் மிகவும் சோகமாக இருந்தால் ..காரணம் கேட்டேன் .
கில்லாடி கிரி மீண்டும் தப்பித்து விட்டானாம் போலீஸ் கிட்ட இருந்து .
கோர்ட்ல இருக்கும் போது ஒரு வழகரிஞ்சர் கழுத்தில் கத்தியை வைத்து தப்பிச்சிட்டான் என்று சோகத்துடன் கூறினால் .
நான் அவளிடம் என்ன கூறுவது காரணம் எனக்கும் அது அதிர்ச்சியாகத்தான் இருந்தது .
இந்த கில்லாடி கிரி வெறும் 26 வயதே ஆனவன் ,ஆனால் 26 ராவணனுக்கு சமமானவன் என்று கூறுவேன் நான் .
6 வயதிலே சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றவன் ,
வெளியில் வரும் போது சொந்தங்களை இழந்தவன் ,
தட்டிகேட்க ஆளில்லாமல் வளர்ந்த ஒரு காட்டன் அவன் ,
அவன் செய்யாத தப்பே இல்லை ,
அவன் அடிகடி செய்வது ,ஒரு பெண்ணை கடத்துவது ,
கற்பழிப்பது ,அப்புறம் அந்த பெண்ணை கொலை செய்து அதை அந்த பெண் வீட்டிற்கே அனுப்பும் ஒரு ராட்சசன் .
இவள் இப்படி கவலை படுவதற்கு காரணம் இவளின் தோழி தீபிகாவை அந்த கொடியவன் கடத்தி கொன்று விட்டான அதனால் தான் அப்படி ஒரு கோவம் அவன் மீது அவளுக்கு .
அவளை என்னால் சமாதனம் செய்யமுடியவில்லை ,நாளைஅவளுக்கு பிறந்தநாள் . ஆனால் அவள் இப்படி இருந்தது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது .
அப்பொழுது திடிர் என்று பார்க்கை விட்டு எல்லோரும் வேகமாக வெளிஏரிகொண்டு இருந்தன ,ஏன் என்று ஒருவரிடம் கேட்டதற்கு அவர் எனக்கு சரியாக தெரியவில்லை என்று கூறிவிட்டு சென்று விட்டார் .
திடிர் என்று போலீஸ் வேகமாக உள்ளே நுழைந்தனர் ,எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அப்பொழுது ஒரு போலீஸ் எங்களை பார்த்து என்ன செய்து கொண்டு இருகிறிர்கள் இங்கே எல்லோரையும் வெளியே வரசொன்னோமே என்று கத்தினார் .
அப்பொழுது திடிர் என்று ஒரு டெஸ்க் அடியில் இருந்து கிரி வெளியே வந்தான் .
நாங்கள் மெதுவாக எழுந்தோம் ,
ஆனால் அதற்குள் அவன் நிவேதா கழுத்தில் கத்தியை வைத்தான் ,
அங்கு என்ன நடக்கிறது ,அவன் எப்படி அங்கு வந்தான் ,என்று எதுவுமே எங்களுகு புரியவில்லை .
ஒரு காவலர் கூறினார் தயவு செய்து அவர்களை விட்டு விடு என்று .ஆனால் அவனுக்குத்தான் தெரியுமே அவளை விட்டால் அவன் உயிரை விட்டுவிடுவான் என்று .
போலீஸ் பின்வாங்கியது ,ஆனால் நிவேதா கூறினால் நீங்கள் இப்படி அவனை விட்டு சென்றாலும் அவன் என்னை கொள்ளத்தான் போகிறான் பிறகு எதற்கு இந்த பரிதாபம் என்று .
ஆனால் காவலர்கள் சமாதானம் ஆகவில்லை ,வேறு வழியும் தெரியவில்லை அவர்களுக்கு பாவம் .
ஆனால் எனக்கு தெரியும் கிரி அன்று சாகபோகிறான் என்று .அவன் கத்தியை நிவேதா கழுத்து அருகில் வைத்து இருந்தான் .
இவள் யோசிக்கவேயில்லை ,உடனடியாக அந்த கதியால் இவளே தன்கழுத்தை வெட்டிக்கொண்டால் .
அவள் கடைசியாக கூறிய வார்த்தை இதுதான் ...
நான் இறந்துவிட்டேன் இப்பொழுதாவது அவனை கொள்ளுங்கள் ..!!
அடுத்த நிமிடமே அவன் உடம்பு 11 குண்டுகளால் துளைக்கபட்டது .
இவை அனைத்தும் இப்பொழுதும் எனக்கு ஒரு நொடியில் நடந்தது போன்றே தோன்றும் .
எத்தனையோ பேருக்கு கிடைத்த வாய்ப்பை இவள் மட்டும் சரியாக பயன்படுடிகொண்டால் .
அவள் அடிகடி கூறிவால் நம் உயிர் எபொழுது போகபோகிறதோ என்று பயபடுவதை விட எதற்காக போகும் என்று எதிர்பார்கலாமே என்று .
இதோ அதே போன்றே நடந்துவிட்டது இன்றுடன் 12 வருடங்கள் ஆகிவிட்டது .
அவளின் பிரிவு எனக்கு வலிதான் நிச்சியமாக ஆனால் அவளின் இறப்பு இப்பொழுதும் என்னகு ஒரு பெருமையான நிகழ்வுதான் .
அவளை பற்றி நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் இப்பொழுதும் எனக்கு ஒரு பனிவிழும் பொழுதுதான் ...!!!