நம்பிக்கை
கற்பனைகள் காவியங்கள் ஆகும்
கவிதைகள் ஓவியங்கள் ஆகும்
நிழல்கள் நிஜங்கள் ஆகும்
ஆகாயம் குடையாகும்
மலையும் மண்டியிடும்
வறுமை எழுச்சி அடையும்
வலிகள் படிகளாக மாறும்
வேதனைகள் வித்துகள் ஆகும்
அவமானங்கள் அனுபவங்கள் ஆகும்
திறமைகள் கண்டிப்பாக தன்னிறைவடையும்
நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டும் இருந்தால்