உணர்வுகள் உலரும் பொழுதுகள்

கொடும் வாளின் கொல்லும்
தடம் பிடித்து மிரட்டும் தனிமையில்
தீண்டும் காற்றென்னை தீயாய் சுடும்
வேண்டாப் பொழுதாய் கழிக்கவியலா
தலையனையின் தற்காலிக ஆறுதல்
மலையருவியென கண்ணீரில் முளைக்கும்
நேய மணாளன் நினைவில் நெகிழ
சுயமாய் பரவும் உணர்வின் அலைகள்

மாண்டவன் வரவியலா மாளுதலில்
தீண்டா மெய்யில் பொய்யாய் புலர்ந்த விடியல்
வீரியத்தை கூட்டி தனிமையின் கைகோர்த்து
இரவின் விளையாட்டில் இம்சையாகும்
இன்னுமோர் தனிமை பொழுதில்
பெண்ணின் உணர்வுகள் உலர்ந்து...

எழுதியவர் : ஜே.பி. ராஜ் (12-Sep-13, 11:40 am)
சேர்த்தது : jbaburaj
பார்வை : 116

மேலே