தங்கமே தங்கம்
தங்கத்தின் மேல் பெண்ணுக்கு ஆசை .
மின்னும் தங்கமும் மஞ்சள் முகமும்
கழுத்திலே தவழும் தாலிக் கொடியும்
கையிலே குலுங்கும் பொன் வளையலும்
காதிலே ஜொலிக்கும் அழகான் தோடுகளும்
அழகு சேர்க்கும் நேர்த்தியும்
பெண்ணின் மனத்தை மயக்க
அதன் மதிப்பும் அதன் மேல்
உள்ள கவர்ச்சியை தூண்ட
தங்கத்தை மென் மேலும் சேர்க்க
துடிக்கும் பெண்ணே
உன் புன்னகையை விடவா தங்கம் மேல்
உன் அன்பை விடவா தங்கம் உயர்வு
தங்கம் ஒரு உலோகம் என்ற நினைப்பு
தூக்கி நின்றால் அதன் மாயை
சற்றுக் குறையும் சற்று விலக்கி
மனம் மாறி தங்கத்தை சற்று மற
மற்றதில் மனத்தை செலுத்து
வாழ்கையை அனுபவி
தங்கம் சேர்க்கும் ஆசையை புறந் தள்ளி
வாழக் கற்றுக்கொள்