அவளாக நான்!!
GOWTHAMA பிரியா
தாயின் கருவையும்
பகிர்ந்துக்கொண்ட நான்,
எனக்கும் தெரியாமலே
என் பெயரையும்
பகிர்ந்து இருக்கிறேன்!
பின் நின்று
அவள் வழிநடத்த
முன்னோக்கி நகர்கிறேன்;
வாழ்விலும் சரி!
பெயரிலும் சரி!
என் வெற்றிக்கு பின்
உள்ள அவளை காணாமலே,
சிலர் அவள் பெயரால்
என்னைத்தழுவ..
நானும் ஒட்டிக்கொண்டேன்!
அவள் பெயர்சொல்லி
யாரேனும் அழைத்தால்,
தலை திருப்பி
அவளை தேடிய நான்:
இன்று
என்னை அழைத்தது
யாரென தேடிக்கொண்டிருக்கிறேன்..
நான் அவளாக மாறியதை
அறியாமலே!!
This is dedicated to my sister Priya!
- கௌதம Priya