வேண்டும் வேண்டும் அ ஆ இ ஈ ...............
அ அனைவருக்கும் அடிப்படை தேவை
கட்டாயம் வேண்டும் வேண்டும்...,
ஆ ஆயுத பூஜையில் தட்டு நெல்லில்
கை பிடித்து "அ" போட ஆசான்
அனைவருக்கும் கிடைக்க
வேண்டும் வேண்டும்...,
இ இரவும் பகலும் நித்தம் நித்தம்
உழைக்கும் குணம் அனைவருக்கும்
வேண்டும் வேண்டும்...,
ஈ ஈ, எறும்பு கூட துன்பம்
இழைக்கா குணம் அனைவருக்கும்
வேண்டும் வேண்டும்...,
உ உழைப்புக்கு ஏற்ற ஊதியம்
அனைவருக்கும் கிடைக்க
வேண்டும் வேண்டும்...,
ஊ ஊசி போடும் மருத்துவர் வரை
உணவு உருவாக்கும் விவசாயி
வரை உண்மையாய் கலப்படம் இல்லாமல்
வேண்டும் வேண்டும்...,
எ எறும்பு போல ஊறி கல்லான
கஷ்டத்தை கரைக்கும் தன்னம்பிக்கை
அனைவருக்கும் வேண்டும் வேண்டும்...,
எழுத்து போன்ற வலைத்தளம்
நிறைய நிறைய
வேண்டும் வேண்டும்...,
ஏ ஏணி படிக்கட்டாய் முன்னேறும்
எண்ணம் அனைவருக்கும்
வேண்டும் வேண்டும்...,
ஐ ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதது
அதனால் ஐந்திலே வளைதல்
அனைவருக்கும் வேண்டும் வேண்டும்...,
ஒ ஒன்பதுலகுரு பத்துலகுரு என்ற
என்னத்தை எல்லாம் தள்ளி வைத்து
உழைக்கும் குணம் அனைவருக்கும்
வேண்டும் வேண்டும்...,
ஓ ஓட்டு வீடு, மெத்தை வீடு என்ற
பேதமய் இல்லாமல் அனைவருக்கும்
சமத்துவமாய் வாழும் குணம்
வேண்டும் வேண்டும்...,
ஔ ஔவை வழியை அனைவரும்
பின்பற்ற வேண்டும் வேண்டும் ...,