மாதவிடாய்

தீண்டாமை
என்றெண்ணி

வெட்கப்படும்
அவன் !

வேதனைப்படும்
அவள் !

கடதாசியில்
நப்கீன் சுற்றும் கடைக்காரன் !

இப்படித்தான்
கழிந்து போகிறது
அந்த சில நாட்கள் !

கருவுக்கு
கருவான சமாச்சாரத்தின்
கார்காலங்கள்

முத்தம் தொலைத்த
மூன்றாம் ஜாமம் !

நிசப்தப்பட்டுக்
கிடக்கிறது !

பாதம் சுமக்கும்
பாதரட்சைகளின்
பரதேசி வாழ்வு போல

மொழி பெயர்க்கப்படாத
ஜப்பானிய ஹைக்கூவாய்
ரசிக்கப்படாமலே .......

எழுதியவர் : -பிரகாசக்கவி - (15-Sep-13, 3:09 pm)
பார்வை : 922

மேலே