முதுமை

வாடகை வாழ்வின்
கார் காலத்தில்

விறு விறுவென
விற்று தீர்கிறது வாலிபம் !

கூவிக் கூவி விற்றாலும் விலை போகா பண்டங்கள்

முள்ளும் தோலுமாய் !

காய்ந்துபோன
சில புன்னகை பூக்களோடு

ஒற்றை பீங்கான்
ஒடிந்த குவளை

ஒரு நாற்காலி
நலிந்து போன மெத்தையென நான்கு கண்களுக்கு மறைவாக

நாள்பட்ட சளியும்
நரை விழுந்த தலையுமாய் !

பிள்ளை வீட்டு தாழ்வாரத்தில் .

எழுதியவர் : -பிரகாசக்கவி - (15-Sep-13, 2:55 pm)
Tanglish : muthumai
பார்வை : 74

மேலே