களவு போகும் உரிமைகள் .
பொழுது புலர்ந்த
அதிகாலை பொழுதில்
கடற்கரையில்
என் வள்ளங்கள் களவு போயிருந்தன .
அங்கும் இங்கும்
அலைந்து தேடுகிறேன் .
சட்டன பெரும் சனக்கூட்டம்
அப்படி இருக்கும் என்று
ஒருவர் .
இல்லை இல்லை
இப்படியாகி இருக்கும் என்று இன்னொருவர் .
இப்படியாய்
பெரும் பட்டிமன்றம் தொடர்கிறது !
திரும்பிபார்கிறேன்
அங்கே
கடலும் களவு போயிருந்தது !