ஐயா !

நான் பிறந்தேன்
தவமாய் தவத்தின் விளைவால்
ஈரைந்து மாதங்களில் ...!

அந்த நாட்களின் இறுதியில்
சிற் சில நிமிடங்களில் வலி நொடிப்பில்
என் தாயின் வலிகளையும் தாங்கி தாண்டியே
உதிர்த்தது செம்மீன் ஆனந்தக் கண்ணீரோடு ...!

அடுத்த சில நிமிடங்களில் உயிர் துடிப்பில்
ஐய்யா வின் நிம்மதியான சந்தோசங்களில்
என் அழுகை சத்தம் கேட்டதும் ...!

என் எதிர் கால வாழ்க்கை எண்ணியே
என் விருப்பமானதை அள்ளி அணைத்து
தேடிப் பிடித்து உண்ணாமல் உறங்காமல்
கஷ்டப்பட்டு உழைத்து வாழ்ந்து கொண்டிருந்த
உத்தமர் என் அய்யா !என் தங்கமே!

சில சமயங்களில் ....
கோபம் கொண்டும் சண்டையிட்டும் வியந்தும்
பாராட்டி மகிழ்ந்தும் வாக்கு வாதம் செய்தும்
உங்களோடு தோற்று ஓடின காலங்கள்...!

சிறு வயதில் அம்மாவின் சேலை பிடித்து
செல்ல அடி வாங்கி முத்தம் கேட்டு
கொஞ்சி மகிழ்ந்து பின்னிப் பிணையும்
தென்னங்கீற்றாய் என் கைகள் உன் கைகளோடு
கோர்த்து விளையாடின காலங்கள்...!
இன்றும் இனிக்குதய்யா! என் ஆசைகள் மேலெழுந்தன அன்று...!

கீழே விழும் எண்ணங்கள் எல்லாம்
நிராசையாக என் காலங்கள் இன்று..
அன்று பெற்றதின் விளைவால்
எனை தாங்கிப் பிடிக்கின்றன இன்றும்...!

நடை வண்டி பழக விட்டு ...
எனக்காக சந்தோசத்திற்காக
தவம் இருந்து தியாகம் செய்து
நல்லது கெட்டது எதுவென எனக்கு புகட்டி
இன்று பேரும் புகழும் தங்களால் தானே..!

என்னவெல்லாம் பலன் அடைந்தீர்
என் வாழ்க்கை பாதையில் தங்களின்
விழி ஓடையில் என் வைரக்கல் முத்தாக ....
என்றும் மறவாது இந்த கண்மணி ஐயா!

மறு பிறவியிலும் தந்தை தாய் தாங்களே !
மாறாது கடவுளிடம் மண்டியிட்டு வேண்டி
தவமிருப்பேன் ஐயா! வாழ்நாள் வரைக்கும் ...!

எழுதியவர் : தயா (15-Sep-13, 10:11 pm)
பார்வை : 127

மேலே