ஓ ....மனிதா ......!
இங்கு
பட்டாசுகள் கொளுத்தப் பட வேண்டும்
தீபாவளிக்கு அல்ல ..........!
ஜாதிகள் ஒழிந்த அன்று .....!
நமக்கு
தினமும் திருவிழாக்கள் வேண்டாம் ..!
மதங்கள் என்று ஒழியுமோ .......!
அன்றே நமக்கு திருவிழா .....!
தனி மொழி
நமக்கு முக்கியம் இல்லை
ஒரு புது மொழி என்று
பொது மொழியாகிறதோ ......!
அதுவே நமக்கு தனி மொழி ...!
அந்த மொழிதான் அன்பு மொழி ...!
சுயநலமும் சுருட்டலும்
ஓடி ஒழியும் நாளே
நமக்கு வசந்த காலங்கள் ...!
இன்று
ஜாதிகளும் மதங்களும்
என் தேசத்தை காக்கவா பயன் பட்டது
தீவிர வாதத்துக்கும் குருட்டு
நம்பிக்கைக்கும் அல்லவா
தூபம் போட்டது ...!
என்
தேசத்தை காக்க ஓட்டு வாங்கிப்போனவர்கள்
எந்தப் பள்ளத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறார்கள்
எங்கள் வரிப் பணத்தில் படித்து
அதிகாரியானவர்கள் யாருக்கு
அடி வருடிகளாக இருக்கிறார்கள் ....?
இந்த
தேசத்தை உருட்டி செல்வது
ஊழலும் லஞ்சமும் அரசியலும்
ஜாதிகளும் மதங்களும் தீவிர வாதங்கள்
என்ற உருளைகள் தானே ....!
ஓ......!
மனிதா ........!
இந்த
தேசத்தில் வந்து
பிறந்ததற்கு .......!
நீ .......................................!
வெட்கப்படப் போகிறாயா .....?
அல்லது
வேதனைப் படப் போகிறாயா .......?