தாய்மை ...!
கருவறை இருட்டு என்று யார் சொன்னது ..?
கருவாய் இருப்பது அவர்களின் குலவிளக்கு
அல்லவா.........!
பெண்மையின் உயர் சிகரம்
தாய்மை அல்லவா ....?
தாய்மை அன்பை சுரக்கும்
அமுத கலசம் அல்லவா .....?
பொறுமையின் ஊற்று
தாய்மை அல்லவா ........?
அதனால் தான் நாம் பிறந்த
மண்ணை தாய் நாடு என்று
சொல்கிறோம் அல்லவா ...?
தாய்மையின் நினைவாய்
நாம் பேசும் மொழியை
தாய் மொழி என்று சொல்கிறோம்
அல்லவா ......?
தாய்மையை போற்றி வணங்காத
உயிர்கள் இம் மண்ணில் உண்டா ...?
கடவுளும் தாய்மையை
வணங்கும் அல்லவா........?
அதலால் மானிடரே தாய்மையை
வணங்குவோம் ....................................!