நிழல் யுத்தம் .
அன்று
அரளி வளர்ந்த ஆத்தோரம்.
இன்று
திரளி மீன்கள் வாங்கி !
அம்மியில மிளகரைச்சு !
உள்ளி உளுவ ஊர வச்சு !
தண்ணியில தக தகன்னு !
எங்க அம்மா ஆக்கிவச்ச
முளகுதண்ணியில
சிறு கசப்பு !
கூலி வேல செஞ்சு !
குடு குடுன்னு ஓடிவந்து !
கைகுத்தரிசியில
முளகு தண்ணி கறி ஊத்தி
சோறு தின்ன எங்க அப்பா
சோக கதை இது !