டிஜிட்டல் சாமியார்கள்

ஆம்பளையா பொம்பளையா
ஆருக்குத் தெரியும் ?
முகமூடி போட்டுக்கிட்டே
முன்னேறுது உலகம்..
கண்ணாடி பார்ப்பதற்கே
காணவில்லை நேரம்
கண்ணறியா சொந்தத்திலே
தொலைக்கிறேன் இதயம்
ராக்கிக் கயிறு என்று
ரசிக்கிறேன் இன்டர்நெட்டு
தொங்கிய பிறகே உணர்கிறேன்
தூக்குக் கயிறு இன்டர்நெட்டு
எங்கே சென்றேன் இப்போது நான் ?
என்றோ நானும் இறந்தே விட்டேன்.....!