மனக்காயங்களுக்கு மருந்திட வருவாயா????

இருக்கமாய் இருந்த என் இரும்பு இதயத்திற்குள்
நெருக்கமாய் வந்தாய்
நட்பு என்னும் நங்கூரம் போட்டு என்
மனக் கடலில் ஆழமாய் நின்றாய்
பூமி சுற்றும் சூரியனை போல
என்னையே சுற்றி வந்தாய்
எல்லோருக்கும் விடுமுறையாம் ஞாயிறு
அன்று கூட என்னை விடாமல் வந்தாய்
எட்டி பார்க்கும் நேரத்திற்குள் என்
மனதை இழுத்து கொண்டு சென்றய்
முளைக்கும் மூச்சு திணறல் வருகிறது
உன் நினைவுகளால்
என் கண்ணிருக்கும் அழுகை வருகிறது
உன் பிரிவாள்
மின்னல் தொட்ட செடி போல்
கருகி பொய் நிற்கிறது என் காலங்கள்
நான் மண்ணுக்குள் போவதற்குள் என்
மனக்காயங்களுக்கு மருந்திட வருவாய்
என் நம்புகிறேன்

எழுதியவர் : vasu (17-Sep-13, 12:51 pm)
பார்வை : 58

மேலே