தமிழை அலட்சியம் செய்தவன்

தாய்மொழியாம் தமிழ் மொழியில்
தெரிந்து கொள்ள இருக்கு ஏராளம் !
ஆங்கிலத்தை அரைகுறையாக தெரிந்துகொண்டு
தாய்மொழியை செய்கிறான் ஏளனம் !

தான் பெற்றெடுத்த பிள்ளையை
வெகு தூரத்தில் தள்ளி விட்டு
அயலான் பெற்றெடுத்த பிள்ளையை
தத்தெடுத்து வித்தெடுத்து வளர்கிறான் !

தத்தெடுத்த பிள்ளை என்றென்றும்
பெத்தெடுத்த பிள்ளைபோல் ஆகாது
பெத்தெடுத்த பிள்ளை என்றும்
தத்துபிள்ளைபோல் ஆகாது !

ஆங்கிலமோகம் கொண்டு அலைபாயும் சமூகம்
செந்தமிழுக்கு முதலிடம் தரும் காலம் விரைவில் வரும் !
தமிழில் படித்தவனுக்கு நாளை
அரசு உத்தியோகம் கைகூடி வரும் !

அந்த நாள் தமிழ் படித்தவனை
தரணி மதிக்கும் -ஊரே
கைகூப்பி கடவுளென துதிக்கும் !

என் பிள்ளையை தமிழில்
படிக்கவைக்க வில்லையே -என்று
பலரும் ஏங்க கூடும் .

ஆங்கிலத்தை மட்டுமே நம்பி
படித்தவர்கள் வேலையின்றி
கொறட்டை விட்டு தூங்க கூடும் !

தமிழை படிக்க தெரியாதவன்
தடு மாறி போவான் !
தமிழை அலட்சியம் செய்தவன்
தடம் மாறிப்போவான்!

ஆகையால்
உயிரான தமிழை போற்றுவோம்
ஆங்கில மோகத்தை
அடியோடு மாற்றுவோம் !

****************தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன் .

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (17-Sep-13, 3:45 pm)
பார்வை : 66

மேலே