பொய்ச் சிரிப்பு... :)

என் சிரிப்புகளும் பொய் சொல்கின்றன - எனக்குத் தெரியும்!
இயல்புகளும் தம் இயல்பினை இழந்துவிடுகின்றன - புரிகிறது!
மரபியல் தாண்டிய முடிவுகளால்...
மரத்துப்போய் விடுகின்றது மனசு...!
புதிதாய் எதையோ தேடுகின்றது!!!
கிடைக்காது... என்று தெரிந்திருந்தும்,
அதற்காகவே ஏங்குகிறது !
போனதோடு போனதாய்
ஞாபகங்களும் போய்த் தொலைந்திருக்கலாம்!
நேரகாலம் தெரியாமல்...
வந்துபோகும் நினைவுகளால்,
கண்களோடு சேர்ந்து...
நனைந்துபோகின்றது மனசும்!
பாரமான இதயம் பற்றியெரிய...
ஈரமான மனசு கொதித்து,
ஆவியாகிக் கிளம்புகின்றன... ஏமாற்றங்கள்!
கலகலப்பாய் சிரித்துக்கொண்டிருக்கும் என்னில்,
மறைக்கப்படும் கண்ணீரைத் தவிர,
வேறெதுவும் உண்மையில்லை...!!!