யாருக்கு லாபம்
ஆள்பவன் மொழியை
ஆளப்படுபவன்
தெரிந்து வைத்திருந்தால்
யாருக்கு லாபம்.........!
தமிழே உனை மிஞ்ச
தரணியில்
மொழியெதுவும்
இல்லையென்று
தலைக்கனத்திலிருந்தால்
யாருக்கு லாபம் .....!
அரிய பெரு நூலெல்லாம்
ஆங்கிலத்தில் இருக்க
அறியாமை கொண்டு
அறிந்துணர மறுப்பது
யாருக்கு லாபம்.........!
எம் `தலைவன்`கூட
வளர்த்தெடுத்தான்
மொழிபெயர்ப்புப் பிரிவை
ஆங்கில மொழியின்
தேவை உணர்ந்ததால்....!
மேல்நாட்டான் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பு வேண்டும்
அவன் மொழி தேவையில்லை
என்று நினைத்தால் அது
யாருக்கு லாபம்.......!
அணு தொடக்கம்
ஆயுதம் வரை அனைத்தும்
ஆங்கிலத்தில் சக்கைபோட
அதை அரைகுறையாய்க் கூட
அறிந்திட முயற்சிக்காது
அடம்பிடிப்பது யாருக்கு லாபம்...!
பழமை பேசிக்கொண்டே
எப்போதும் பழமையிலிருந்தால்
யாருக்கு லாபம்............!
மனதை விசாலமாக்கி
மொழியை மொழியாய் பார்த்தால்
புரிவோம் ஆங்கிலத்தின் தேவையை ....!!
------------------------------------------------------------------
தோழி துர்க்கா