@@@ நஞ்சு வார்த்தைகள் @@@

நாவென்ற வில்லேந்தி
வார்த்தையெனும் அம்பெடுத்து
புரியாமை என்னும் நஞ்சு தடவி
என் இதயம் பார்த்து எய்தாயோ

புரிதலில்லா மழலையின்
வார்தைகலென்று புரிந்துக்கொள்ள
சமாதானமாவென சாகுதடி
சகோதரி இவள் மனம்

அக்காவென்ற உறவிலும்
அன்னையும் தந்தையுமாய்
பாசத்தோடு காத்தேன் அறியாத
வார்த்தையால் அனாதையானேன்

போராடி பொறுமைகாத்து
கல்லூரிக்கு அனுப்பினேன்
கற்றுவந்த வார்த்தையால்
பேரிடியை மனதில் தாக்கினாய்

கட்டுப்பாடும் சுதந்திரமும்
கருத்தோடு கற்றுத்தந்தேன்
கேட்க்க முடியா வார்த்தைகளால்
கட்டுப்பாடு மீறி கண்களில் கண்ணீர்

நம்பிக்கையும் நம்பும்படி
நான் வைத்தேன் நல்லவளே
சந்தேகமாவென்று மனதில்
அடித்திட்டாய் சாட்டையடி

அனல்மழையில் நனைந்தும்
அக்கினி குழம்பு பருகியும்
ஆசிட்டில் அட்சதை பெற்றும்
இறந்த சூரியனாய் நானிங்கு !!!

...கவியாழினி...
(இரு சகோதரிகளுக்கு இடையில் புரிதல் இல்லாமல் போக வந்துவிழும் வார்த்தையால் மனதில் எழும் உணர்வாய் இக்கவிதை )

எழுதியவர் : கவியாழினி (18-Sep-13, 11:42 am)
பார்வை : 140

மேலே