முயற்சி
நீ பறிக்க முயன்றால் உனக்கு
ரோஜா தான் தெரியும்
முட்கள் தெரியாது
நீ எடுக்க முயன்று விட்டால்
உனக்கு முத்து தான் தெரியும்
கடலின் ஆழம் தெரியாது
நீ நடக்க முயன்று விட்டால்
உனக்கு பாதை தான் தெரியும்
தடுக்கும் கற்கள் தெரியாது
நீ அடைய முயன்று விட்டால்
உனக்கு வெற்றி தான் தெரியும்
தோல்வி தெரியாது
எனவே முயற்சி செய் !
விடா முயற்சி செய் !
வெற்றி உன் கையில் ...