விரி வனம்

கனி உண்ணும்
பறவையின் எச்சத்தில்
ஒளிந்திருக்கும்
விரி வனத்தின்
மர நிழலில்
இளைப்பாறும்
வழி போக்கனாய் நான்.

கனவில்
வீடு வாங்கி விட்டேன்
சுற்றி நடுவதற்கு
சில மரக் கன்றுகள் தேவை......

எழுதியவர் : சுந்தர பாண்டியன் (18-Sep-13, 3:58 pm)
சேர்த்தது : சுந்தர பாண்டியன்
Tanglish : viri vanam
பார்வை : 65

மேலே