தூரத்து பயணம்
இலட்சியங்களின்
முதுகிலேறி
ஒட்டக தேசத்துக்கான
பயணமிது!
அம்மாவும்
அப்பாவும்
அழுது ஆசிகள் பல கூற
அண்ணனும்
தங்கையும்
முத்தங்கள் பறிமாற
ஏக்கத்தோடு மனைவியும்
பாசத்தோடு பிள்ளைகளும்
பாவமாய் பார்த்திருக்க
விரும்பியும்
விரும்பாமலும்
விரைந்து செல்லும் பயணமிது
ஓராயிரம்
இலட்சியங்களின் முதுகில்
ஒற்றை வீரனாய் .
பணமெனும்
பள்ளத்தாக்குகளைதேடிய
பயணமிது .!
ஒருவேளை
அம்மாவும் அப்பாவும்
செத்துப்போயிருக்கலாம் .....!
மனைவி பிள்ளைகள்
நோயினால்
நொந்து போயிருக்கலாம் ....!
ஏன்
எனக்கு கூட
வழுக்கை விழுந்துவிடலாம்....!
ஆனால்
நானும் என் கனவுகளும்
முடிவிலியாய் ..................
பணமெனும் பள்ளத்தாக்குகளைநோக்கி .........