நமக்குள்...
ரகசியங்கள் இல்லை
என்று ஆனபின்,
பாலின வேறுபாடுகளில்லை,
பார்ப்பவர்கள்
பிரித்து பார்க்க.
நமக்குள் பிரிவில்லை,
காதலுமில்லை
நட்புமில்லை,
உணர்வில் ஒன்றானபின்
உருவம் ஏது,
வெற்றிடத்தை
எதைக்கொண்டும்
நிரப்பலாம்,
நீயாகவும் நானகவும்
நிரம்பியிருப்போம்
நீங்காது,,