கிராமிய புலம்பல்
மாடு கட்டி சந்தைக்கு போன
மாமன் மவ உன் ஞாபகம்
மருதானியப் பாக்கையிலே அடி
மரிகொழுந்து உன் ஞாபகம்
கால் சட்டை போட்டப்பவே
கால் கட்டுக்கும் சேர்த்துப் போட்டா
உனக்கும் நான்னும் எனக்கு நீன்னும்
சொல்லியே பித்தான் போட்டா
ஆத்தங்கரைக்கு போன நேரம்
ஆத்தா உன் ஞாபகம்
கால் தடத்த தேடிப் பார்த்தேன்
காணாமபோக நான் துடிச்சேன்
பக்கத்து வீட்டு பரிமளம்
கூப்பிட்டா கூட ஓடி வந்து சொல்லுவியே
எருமையில வந்தவன் கூப்பிட்டான்னு
சொல்லாம போயிட்டியே
ஓடிப்போற தூரத்துல
எடம் இருந்தாலும் ஒத்தையில போகமாட்டியே
ஒலகத்த விட்டு போகும்போது
எப்படியம்மா போகத்துனிஞ்ச ?
எவன் வந்தாலும் ஏன்
எமனே வந்தாலும் நம்மலப்
பிரிக்க முடியாதுன்னு சொல்லுவியே
நீ பொய் கூட சொல்லுவியோ ?
டவுனுக்கு போறேன்
என்ன புள்ள வேணும்னு கேட்டா
பொட்டுத் தங்கம் வச்சி தாலி
வாங்கித்தா மச்சான்னு கேட்டியே
முப்பது சவரன்ல
மூக்கு மேல விரல வைக்குற சைசுல
தாலி ஒன்னு வாங்கி வந்தேன்
அத கட்டி தரமாக வா புள்ள
என் கண்ணுல நீருன்னா
தொடச்சி விட வருவியே
இப்போ அருவி போல அழுவுரேனே
ஆறுதல் சொல்ல வா புள்ள
சாதி நம்மல பிரிக்காதுன்னு
ஜாலியாக இருந்திட்டோம்
வியாதி வந்து பிரிக்குமுன்னு
தெரியாம வாழ்ந்திட்டோம் ..
நீ எங்கிருந்து பேசினாலும்
எம் மனசுக்குள்ள கேட்கும்னு
சொன்னியே அது சொர்கத்துலயும்
கேட்குதா புள்ள ?
" இது 1994இல் நான் எழுதிய முதல் கவிதை".