வாழ்வியல்
கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்!
ஆசையை வளரவிடாதே அது "கள்" ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை"கள்")
ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் - ஒவ்வொரு முறையும்!!
வழக்கில் தீர்ப்பு சொல்லும்போது வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாளி உயிரோடு இருப்ப
தில்லை.
காலம் கடந்து கொடுக்கப்படும் எந்த ஒரு சரியான தீர்ப்பும் தவறானதே!
சில தவறுகள் மன்னிக்கப்படாததுதான் மிகப்பெரிய தவறாய் மாறிவிடுகின்றது!!
நல்லதாய் ஒரு காரியம் செய் என்பதற்கு வேண்டாத ஒருவருக்குக் காரியம் செய் என்பது பொருளல்ல!
கஷ்டம் என்றால் என்னவவென்று தெரிந்துகொள்ளவே கஷ்டப்படுகிறேன்!
வாழ்க்கைல நல்லவனா இருப்பதைவிட நல்லவனா நடிப்பது ரொம்ப கஷ்டம்டா சாமி!
இது தாண்டா வாழ்க்கை இன் முக்கிய குறிப்பு